தேவரும் மாந்தரும்
தேவர்கள் மனித உருவில் நடமாடுவதாக நம்பினர். தேவர்களைத் தெய்வம் எனவும் வழங்குவர். தேவர் சூடிய பூவில் வண்டு மொய்க்காதாம். மக்கள் சூடிய பூவில் வண்டு மொய்க்கும். தெய்வம் சூடிய அணிகலன்கள் அவர்களது உடலோடு ஒன்றிக் கிடக்குமாம். மக்கள் செய்யப்பட்ட அணிகலன்களைப் பூண்டிருப்பார்கள். வள்ளி என்பது பெண்ணின் முலையிலும் தோளிலும் கொடி போல் எழுதப்படுவது. தெய்வங்களுக்கு வள்ளி எழுதப்பட்டிருக்காது. மனிதன் சூடிய பூ வாடிவிடும். தெய்வம் சூடிய பூ வாடுவதில்லை. மாந்தர்ரின் கண்கள் சுழலும், இமைக்கும். தேவரின் கண்கள் சுழல்வதில்லை, இமைப்பதில்லை. மாந்தர்க்கு அச்ச உணர்வு தோன்றும். தேவர்களுக்கு அது தோன்றுவதில்லை. (மற்றும் மனிதனுக்கு வியர்வை தோன்றும். தேவர்க்கு வியர்வை இல்லை)[1]
கடவுளுக்குக் கால்கள் நிலத்தில் பாவுவதில்லையாம். [2]
தனியே நிற்கும் அழகியைப் பார்க்கும் ஒருவன் இவள் தேவதையோ என ஐயுறும்போது இங்குக் காட்டப்பட்ட வேறுபாடுகளால் நிற்பவள் மண்மகள் என உணர்ந்துகொள்வானாம். இலக்கியங்களில் இப்படி ஒரு கற்பனை நிகழ்வு. [3]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ
நின்றவை களையும் கருவி என்ப - தொல்காப்பியம், களவியல் நூற்பா 4 - ↑ கால் நிலம் தோயாக் கடவுள் - நாலடியார் கடவுள் வாழ்த்து
- ↑
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. - திருக்குறள்